திருமணம் செய்து கொள்ள 16 வயது சிறுமி கடத்தல் இளைஞர் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்ள 16 வயது சிறுமி கடத்தல் இளைஞர் மீது வழக்கு

சிறுமி கடத்தல் இளைஞர் மீது வழக்கு

அரூர் அருகே திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டு வந்தவர்களிடம், பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில், 16 வயது சிறுமியை இளைஞர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் அருகேயுள்ள தீர்த்தமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அரூர் அருகேயுள்ள மாம்பட்டியை சேர்ந்த சக்திவேல்(23) என்பவர், சிறுமியை பெண் கேட்டு வந்துள்ளார். தனது மகளுக்கு திருமண வயது வரவில்லை என சிறுமியின் பெற்றோர், பெண் கொடுக்க மறுத்து நிலையில், கடந்த 24ம்தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, சக்திவேல் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story