சிறுவர்களுக்கு சூடு வைத்த பெண் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

சிறுவர்களுக்கு சூடு வைத்த பெண் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

காவல் நிலையம் 

கொல்லங்கோடு அருகே பக்கத்து வீட்டில் மாங்காய் பறித்ததால் சிறுவர்களை கட்டி வைத்து தீயால் சூடு வைத்த பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு பகுதி சேர்ந்தவர் அருள்தாசன். மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி ஷைஜி.இந்த தம்பதிக்கு பத்து மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் உண்டு. இந்த சிறுவர்கள் கடந்த 9-ம் தேதி காலை பக்கத்து வீட்டு மரத்தில் உள்ள பிஞ்சு மாங்காய் பறித்து தின்றுள்ளனர்.இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் கலா (42) என்பவர் சிறுவர்களை மடக்கி பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்று நாற்காலியில் கட்டி வைத்து கை கால் உட்பட பல பகுதிகளில் தீயால் சூடு வைத்து அனுப்பியுள்ளார்.இதை அடுத்து சிறுவர்கள் ரெண்டு பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து சிறுவர்களின் தாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கலா மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story