சப்-கலெக்டர் எனக் கூறி ஏமாற்றி் திருமணம் செய்த தலையாரி மீது வழக்கு

சப்-கலெக்டர் எனக் கூறி ஏமாற்றி் திருமணம் செய்த  தலையாரி மீது வழக்கு

கைதான வாலிபர்

மதுராந்தகத்தில் சப்-கலெக்டர் எனக் கூறி ஏமாற்றி் திருமணம் செய்த தலையாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிசிஏ பெண் (22 வயது) பட்டதாரிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த அஜித் குமார்( வயது 27) என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் அசலாத்தம்மன் கோயிலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அஜித் குமார் தான், உதவி கலெக்டராக பணியாற்றுவதாகவும் மதுராந்தகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் உள்ளது எனவே கூறியுள்ளார். பிறகு நான் துணை தாசில்தார் எனக்கூறியுள்ளார். இளம்பெண் சந்தேகப்பட்டு கேட்டபோது துணை தாசில்தாராக இருக்கிறேன். விரைவில் தாசில்தர் ஆகி சப் -கலெக்டர் ஆகிவிடுவேன் என்றுதான் கூறினேன் என மழுப்பலாக பதில் கூறி இளம் பெண்ணை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி இருவருக்கும் மதுராந்தகத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அஜித் குமாரின் குடும்பத்தினர் வரதட்சணையாக 25 சவரன் கேட்ட நிலையில், இளம்பெண் வீட்டார் 22 சவரன் நகை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மூன்று சவரன் நகையை வாங்கி வர சொல்லி அஜித்குமார், தனது காதல் மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அவரது செல்போனை எடுத்து பார்த்துவிட்டு யார் யாருடன் தொடர்பில் உள்ளாய்? என தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498(a)- கொடுமைப்படுத்துதல் ( குடும்ப வன்முறை- domestic violence) என்ற பிரிவின் கீழ் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. போலீசார் நடத்திய விசாரணையில் மதுராந்தகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக அஜித்குமார் பணியாற்றுவது தெரிய வந்தது..

Tags

Next Story