தொழிலாளியை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு

தொழிலாளியை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு
தகராறு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே மரத்தை வெட்டி அகற்றியதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் ,புதுக்கடை அருகே மராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் செங்கல்சூளை தொழில் செய்து வருகிறார். தோட்டவாரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலித் தொழிலாளியான இவர் சம்பவ தினம் பிரகாஷ் வீட்டு முன்பு நின்ற ஒரு காட்டுமரத்தை நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றியுள்ளார்.

இதை அறிந்த பிரகாஷ் சம்பவ தினம் இரவு சிவகுமாரிடம் சென்று மரத்தை வெட்டி அகற்றியது தொடர்பாக கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் கல்லை எடுத்து பிரகாஷ் மீது எறிந்துள்ளார். கல்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்த பிரகாஷ் காயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரகாஷை சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story