பெண் தற்கொலை - தாய் புகார்

பெண் தற்கொலை - தாய் புகார்
விருதுநகர் முத்துராமலிங்கநகரில் பெண் தூக்கிட்டு தற்கொலை அவர் தாய் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் முத்துராமலிங்கநகரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தாய் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் யானைக் குழாய் தெருவில் வசித்து வந்து வருபவர் நாகஜோதி.இவர் அதே பகுதியைச் சார்ந்த மாதவன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதை நாகஜோதி தன் தாயிடம் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு அவருடைய தாய் லட்சுமி ஆறுதல் கூறி வந்ததாகவும் இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு நாகஜோதியின் கணவர் மாதவன் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை இட்டதாகவும் மறுநாள் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகஜோதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய கணவர் மாதவன் லட்சுமிக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சென்று தன் மகள் உடலை பார்த்த பின்பு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story