தனியார் பால் நிறுவனத்தில் ஒயர்களை திருடிய 6 பேர் மீது வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம்,கொலசனஅள்ளி பகுதியில் பிரபல தனியார் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் ஆறு பேர் காப்பர் வயர்களைத் திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி அருகே கொலசனஅள்ளியில் தனியார் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவ னம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் பின்பகுதி வழியாக சுற்றுச்சூவரை ஏறி குதித்து மர்மந பர்கள் 6 பேர் அங்கிருந்த காப்பர் ஒயர்களை திருட முயன்றனர்.
சத்தம் கேட்டு அந்த நிறுவன காவலாளி ஓடி வந்துள்ளார். அங்கிருந்து 6பேரும் தப்பிசென்றனர். இதுதொடர்பாக அந்த நிறுவன மேலாளர் சுந்தரராஜூ மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் அளித்து புகாரின் பேரில் மாரண்ட அள்ளி காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story