மின்சாரம் தாக்கி சிறார் உயிரிழந்த விவகாரம்: மூன்று பேர் மீது வழக்கு பதிவு
காவல் ஆணையர் அலுவலகம்
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி வியோமா பிரியா மற்றும் 6 வயது சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி ஆகியோர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.முதலில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு யாருடைய அஜாக்கிரதை காரணம் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.குடியிருப்பு சார்பில் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட தெரு விளக்கிற்கான புதைவட இணைப்பிலிருந்து தான் மின் கசிவு ஏற்பட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த சறுக்கு விளையாட்டின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.இந்த நிலையில் வழக்கின் பிரிவு 304(A) அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்தகைய சூழலில் ஒப்பந்ததாரர்கள் முருகன், சீனிவாசன், எலக்ட்ரீசியன் சிவா ஆகியோர் மீது 304( A) பிரிவின் கீழ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.