கல்லூரி மாணவருக்கு  கத்திக்குத்து ஆட்டோ டிரைவர் மீது  வழக்கு

கல்லூரி மாணவருக்கு  கத்திக்குத்து ஆட்டோ டிரைவர் மீது  வழக்கு

வாலிபருக்கு கத்திகுத்து 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வாலிபரை கத்தியால் குத்திய ஆட்டோ ஒட்டுநரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வடக்கூரை சேர்ந்தவர் உமையொருபாகன் என்ற விஜய் (22). இவர் பொறியியல் நான்காம் ஆண்டு மாணவர் ஆவார். கடந்த 16ஆம் தேதி தோவாளை வடக்கூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முத்துவேல் (33) என்பவர் மது போதையில் ரகளை செய்துள்ளார். அப்போது கோவில் நிர்வாகத்தினர முத்து வேலை கோவில் இருந்து வெளியே அனுப்பி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முத்து வேலை கல்லூரி மாணவர் விஜய் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துவேல் விஜய்யை தாக்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சாமி வாகன ஊர்வலத்தில் விஜய் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்து முத்துவேல் விஜய்யை தகாத வார்த்தையால் பேசியதுடன், திடீரென கத்தியால் குத்தினார்.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ்சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முத்துவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். முத்துவேல் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story