சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு...

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு...

சட்டவிரோத பட்டாசுகள்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல். 2 பேர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி இந்திராநகர் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் போட்டோ பிளாஸ் ரக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பட்டாசுகளை கைப்பற்றிய போலீசார், மகேந்திரன், ஆனந்தசெல்வம் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story