சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

பாமக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் மேட்டூரில் அனுமதி இன்றி அறிமுக கூட்டம் நடத்திய பாமக வேட்பாளர் மீது வழக்கு பதிவு.
மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் 27.03.2024 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை அறிமுகம் செய்து வைத்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது. இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி கூட்டம் கூட்டிய பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே, மணி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்பட 11 பேர் மீது மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story