பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

பாஜக வேட்பாளர் 

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று இரவு கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் 500 ரூபாய் நோட்டு கட்டை வாக்காளர்கள் மத்தியில் காட்டி கரூர் MP உங்கள் பகுதியில் நேரில் வந்து செய்த நல திட்டத்தை கூறினால் பரிசு வழங்குவதாக கூறியிருந்தார் .இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து இன்று பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story