விறகு சேகரிப்பதில் ஏற்பட்ட தகராறு - மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது வழக்கு பதிவு
ரெஞ்சிதம்
அருமனை அருகே தோட்டத்தில் விறகு சேகரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது வழக்கு பதிவு.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ரெஞ்சிதம். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விறகு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாக்கிய நாதன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரும் அங்கு விறகு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சிதம் சேகரித்து வைத்த விறகுகளை பாக்கியநாதனும் சாந்தகுமாரியும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாக்கியநாதன் கத்தியாலும், சாந்தகுமாரி கம்பாலும் ரெஞ்சிதத்தை தாக்கியதாக கூறப்படு கிறது.இதில், காயம்அடைந்த ரெஞ்சிதம் ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு உள்ளார். சம்பவம் தொடர்பான புகாரின் பேரில், அருமனை போலீ சார், பாக்கியநாதன், சாந்தகுமாரி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story