ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு
விருதுநகர் சின்ன பேராளி கிராமத்தில் பிரசாந்த் என்பவரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்குப்பதிவு விருதுநகர் கே. உசிலம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பிரசாந்த் வயது 33 இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இறந்த ஒருவரின் இறுதி சடங்கில் ஃப்ரீசர் பாக்ஸ் போட்டுவிட்டு வந்ததாகவும் 28ஆம் தேதி மாலை பிறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு தனது ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் நின்று விட்டதாகவும் அப்பொழுது அந்த பகுதியை சார்ந்த ரவுடி பாலு மற்றும் அவருடைய மகன் சூர்யாவும் பிரசாந்தை தலை குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரசாந்த் தந்தை மகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.