நீதிமன்ற விசாரணைக்கு வந்தவரை கொலை - அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு
நீதிமன்ற விசாரணைக்கு வந்தவரை கொலை செய்த வழக்கில் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு திரும்பிச் செல்லும்போது, குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக குற்றவாளி ராமர் என்ற ராமகிருஷ்ணன் தனது உறவினர் கார்த்திக் என்ற முத்துராஜாவை அழைத்து வந்தார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, ஊர் திரும்ப இருசக்கர வாகனத்தில் கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, அரவக்குறிச்சி அடுத்த தேரப்பாடி பிரிவு சாலை அருகே காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கொடூரமாக அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ராமர் என்ற ராமகிருஷ்ணன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். கார்த்திக் என்கிற முத்து ராஜா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் தொடர்பாக கார்த்திக்கு என்கிற முத்துராஜ் அளித்த புகாரின் பேரில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story