பெண்ணை தாக்கிய தாய் மகன்கள் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் யானைக் குழாய் தெருவை சார்ந்தவர் மாரியம்மாள் வயது 35. இவர் கணவர் மதுரை வீரன். மாரியம்மாள் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் கடைக்கு எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் ஆர் எஸ் நகரைச் சார்ந்த மாரிச் செல்வம் என்பவருக்கும் மாரியம்மாளுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாரியம்மாளுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு மாரியம்மாள் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் அங்கு வந்த மாரிசெல்வத்தின் மனைவி கோடீஸ்வரி அவரின் மகன்கள் பாலமுருகன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் மூவரும் மாரியம்மாளை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாரியம்மாள் அளித்த புகார் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.