சிவகாசியில் ஆம்னி பேருந்து டிரைவர் மீது வழக்கு பதிவு...

சிவகாசியில் ஆம்னி பேருந்து டிரைவர் மீது வழக்கு பதிவு...

வழக்குபதிவு 

சிவகாசியில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆம்னி பேருந்து டிரைவர் மீது வழக்கு பதிவு.

சிவகாசி அருகே ஆம்னி பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் ( 45). இவர் ஆம்னி பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் இவரது மனைவி சாந்திக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் இருந்து வேலை முடிந்து வீடு வரும்போதெல்லாம் துரைராஜ் குடித்து விட்டு வந்த மனைவி மற்றும் மகள்கள் பூர்ணிமா, சூரியகலா ஆகியோருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத் தன்று கோவில்திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மனைவி மற்றும் மகளை துரைராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் திருத்தங்கல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆம்னி பஸ் டிரைவர் துரைராஜ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story