வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தவர் மீது வழக்குப்பதிவு

வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தவர் மீது வழக்குப்பதிவு
பைல் படம்
நாகர்கோவிலில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த பாரதிய ஜனதா நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பகுதியை தாறாவிளையை சேர்ந்தவர் தக்ஷா (28) இவர் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் நெல்லை மாவட்டம் களக்காடு மேலமாவடி மலையடி புதூரை சேர்ந்த பால்பாண்டியன் (31) என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண நடந்தது. திருமணத்தின் போது 400 பவுன் தங்க நகைகள். ரூபாய் 30 லட்சம் ரொக்கம், 2 ஏக்கர் தென்னை தோப்பு,ஒரு கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வரட்சனையாக கொடுத்தோம். ஆனால் திருமணம் முடிந்த நாளில் இருந்து என்னை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினர்.

எனக்கு குழந்தை பிறந்த பின்பும் என்னையும் குழந்தையையும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கவனிக்காமல் கொடுமைப்படுத்தினர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து விசாரணை நடத்த கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதை அடுத்து போலீசார் விசாரண நடத்தி, தக்ஷாவின் கணவர் பால்பாண்டியன், அவருடைய தந்தை சங்கரநாராயணன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சங்கர நாராயணன் பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணி மாவட்ட தலைவராக உள்ளார்.

Tags

Next Story