மது போதையில் தாய் தந்தையை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

மது போதையில் தாய் தந்தையை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

காவல்துறை விசாரணை


மாரண்டஅள்ளி அருகே உள்ள செவத்தம்பட்டியில் மது போதையில் தாய் தந்தையை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியை அடுத்த செவத்தம்பட்டியை சேர்ந்த பாப்பண்ணன், இவருடைய மனைவி வளர்மதி, இந்த தம்பதியின் இளைய மகன் ரமேஷ், இவர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட தாயை விறகு கட்டையால் தாக்கியதாக கூறப்ப டுகிறது. இதனை தடுக்க வந்த பாப்பண்ண னையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story