வீட்டை இடித்த நிலத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

லால்குடி அருகே தொழிலாளர்கள் குடியிருந்த வீட்டை இடித்த நிலத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கி லால்குடி அருகே வேலாயுதபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் 35 வயதான சுப்பிரமணி பண்ணையாளரான ஜெயபால் அந்த காலத்தில் வயலில் வேலை செய்வதற்காக சில கூலி ஆட்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு தங்களுடைய களம் போர்ப்பட்டடி இடத்தில் குடும்பத்துடன் குடிசை அமைத்து தங்க அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் காலமாகிவிட்டார்.

தற்போது அவர் மகன் சுப்ரமணி குடியிருந்தவர்களிடம் இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார் அதற்கு எங்களுக்கு மாற்று இடம் வேண்டுமென குடியிருந்த கூலித் தொழிலாளிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறை, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்நிலையில் வேலாயுதபுரம் கீழ தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான கோமதி. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்படி இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் எனது இடத்தை காலி செய்து தருமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வேலாயுதபுரத்தில் உள்ள சுப்பிரமணி என்பவர் அடையாளம் தெரியாத 10 க்கும் மேற்பட்ட நபர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கோமதியின் குடிசை வீட்டை இடித்து தரைமட்டமாக்கி சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் சுப்பிரமணி மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story