கள்ள ஓட்டு போட்டதாக வாலிபர் மீது வழக்கு

கள்ள ஓட்டு போட்டதாக வாலிபர் மீது வழக்கு

பைல் படம்

குமரியில் கள்ள ஓட்டு போட்டதாக வாலிபர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.

வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அரவிந்த்' மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story