மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ்

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ்

இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய அருள் ஆறுமுகம் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.

செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட அருள் ஆறுமுகம் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் திரும்ப பெற்றது தொடர்ந்து விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு மேல்மா, தேத்துறை, குரும்பூர், நர்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3300 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 126 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

மேலும் சாலை மறியல் போராட்டம் உண்ணாவிரதம் போராட்டம் காத்திருப்பு போராட்டம் அதே போல் 10 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை கைது செய்து ஏழு விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக ஆறு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் திரும்ப பெறப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்கின்ற ஆறுமுகம் என்பவர் மீது மட்டும் குண்டர் தடுப்புச் சட்டம் திரும்ப பெறாமல் இருந்து வந்தது இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் விவசாயிகள் அருள் ஆறுமுகம் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அருள் ஆறுமுகம் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து.

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

Tags

Next Story