மோசடி உள்ளிட்ட வழக்குகள் - பெண் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

மோசடி உள்ளிட்ட வழக்குகள் - பெண் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

விஷ்வதர்சினி

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி மோசடி , மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண்ணை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வதர்சினி.இவர் பேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் பழகி தான் டைகர்வே என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி மோசடி செய்த வழக்கில் கடந்த மே 8 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் விஷ்வதர்சினி கோவை காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும், பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரில் மீண்டும் செல்வபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே விஷ்வதர்சினிமீது துடியலூர் காவல் நிலையத்தில் காவல் துறையிருடன் ஆபாசமாக பேசி பணி செய்ய விடமால் தடுத்தது பிரகாஷ் ஸ்வாமி என்பவரை மிரட்டியது என வழக்குகள் உள்ளது.

மேலும் விஷ்வதர்சினி மீது கடந்த 2018 ஆம் வருடம் சிறுமியை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம மூன்று வருட சிறை தண்டனை விதித்து தண்டணை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. விஷ்வதர்சினி தொடர்ந்து பொது மக்களையும்,காவல் துறையினரையும் மிரட்டுவதையும்,அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் இவரின் நடவடிக்கை கட்டுபடுத்தும் பொருட்டு கோவை மாநகர போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர்.கோவை மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் விஷ்வதர்சினியிடம் இதற்கான உத்திரவினை போலீசார் வழங்கினர்.

Tags

Next Story