கேரளாவில் இருந்து வந்த லோடு வேனில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

கேரளாவில் இருந்து வந்த லோடு வேனில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

பறிமுதல் 

கேரளாவில் இருந்து வந்த லோடு வேனில் உரிய ஆவணம் என்று கொண்டு வந்த ரூ.90 ஆயிரம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் ஆணையம் காவல்துறை உதவியுடன் பல்வேறு வாகனங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைக் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சத்யபாமா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் காளிராஜ் சார்பு ஆய்வாளர் குழுவினர் வாகன சோதனை செய்த போது KL 21 V 6334 என்ற போலிரோ பிக்கப் வாகனத்தினை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் என்று ரூபாய் 90 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்ன நடத்திய விசாரணையில் வாகனம் ஓட்டி வந்தவர் திருவனந்தபுரம் , நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நெளசாட் நெளடல்சா மன்சில் என்பவரது மகன் முகமது நஜீம்ஷா ( 21 ) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 90000/- பணத்தைக் கைப்பற்றினர் பின்னர் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் லோகநாதன் இடம் ஒப்படைத்தனர். பின்ன கைப்பற்றிய பணத்தை சீல் வைத்து கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story