திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3.72 லட்சம் பறிமுதல்
பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணம் என்று கொண்டுவரப்பட்ட ரூ. 3.72 லட்சத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3.72 லட்சம் பறிமுதல். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் தட்டான்குட்டை பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி கர்ணல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ் (40) என்பவரிடம் ரூ.72 ஆயிரம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி மணிவேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பாளையக்காடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவரிடம் ரூ.3 லட்சத்து 100 இருந்தது. இதற்கான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பணத்தை உதவி ஆணையர் கணக்கு (பொ) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்தனர். இதில் தேர்தல் துணை தாசில்தார் வசந்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story