ஒசூரில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

ஒசூரில்  வாகன சோதனையில்  பணம் பறிமுதல்

ஒசூர் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


ஒசூர் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூர் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 5 லட்சத்து 8ஆயிரம் ரூபாய் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் இன்று வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திகிரி என்னுமிடத்தில் வேனில் தர்சன் என்பவர் ஆவணங்களின்றி கொண்டு வந்த 1.45 லட்சம் ரூபாயும் அலசநத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆவணங்களின்றி விஜய் என்பவர் கொண்டு வந்த 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் நல்லூர் என்னுமிடத்தில் நாகராஜ்(50) என்பவர் காரில் கொண்டுவந்த 1.63 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது 5 லட்சத்து 8 ஆயிரத்து 110 ரூபாய் பணம் அதிகாரிகளால் ஒசூர் சார் ஆட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story