கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 . 84 லட்சம் பறிமுதல் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 . 84 லட்சம் பறிமுதல் 

 பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை 6 . 84 லட்சம் பறிமுதல்.
கன்னியாகுமரிமாவட்டத்தில் தோதல் பறக்கும் படையினா் நேற்று புதன்கிழமை சோதனை நடத்தி, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 975-ஐ பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் அருகே கேசவதிருப்பாபுரத்தில் பறக்கும் படையினா் சோதனை நடத்தி, ஆவணங்களின்றி இருவா் கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 77 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனா். இது உள்பட நாகா்கோவில் பேரவைத் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 975, விளவங்கோடு பேரவைத் தொகுதியில் ரூ. 3.45 லட்சம், பத்மநாபபுரம் தொகுதியில் ரூ. 56 ஆயிரம் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 975-ஐ பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தளனா். மேலும், பத்மநாபபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் கொண்டு செல்லப்பட்ட 2,350 துண்டறிக்கைகள், விளவங்கோடு கடைவீதியில் 3 ஆயிரம் துண்டறிக்கைகள் என மொத்தம் 5,350 துண்டறிக்கைகளையும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story