கெங்கவல்லியில் காரில் கொண்டு வரப்பட்ட ₹4.19 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லியில் காரில் கொண்டு வரப்பட்ட ₹4.19 லட்சம் பறிமுதல்

பணம் பறிமுதல்

கெங்கவல்லியில் காரில் கொண்டு வரப்பட்ட ₹4.19 லட்சம் பறிமுதல்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில், வீரகனூர் அருகே லத்துவாடி சோதனை சாவடியில், நேற்று இரவு கண்காணிப்புக்குழு கார்த்திகேயன் தலைமையிலான பறக்கும் படையினர், சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில்,உரிய ஆவணம் இன்றி ₹4.19 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. விசாரணையில், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கொண்டு வந்தது தெரிந்தது. உரிய ஆவணம் இல்லாததால், ₹4.19 லட் சத்தை அலுவலர் கார்த்திகேயன் பறிமுதல் செய்து, மண்டல துணை தாசில்தார் முருகானந்தத்திடம் ஒப்படைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story