சாத்தூர் அருகே பணம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்து உள்ளது.
இந்த நிலையில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட 7 வாகனங்களில் தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வெம்பக் கோட்டை பகுதியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மகேந்திரன் என்பவரிடம் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
மேலும் காரை சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் மேலும் சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டியில் அருப்புக்கோட்டை துணை வட்டாட்சியர் சஞ்சய் காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தாயில்பட்டி பகுதியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ஜெயச் சந்திரன் என்பவரின் இருசக்கர வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த போது அவருடைய இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியபாமா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருப்பூரை சேர்ந்த அகஸ்தியர் லிங்கம் என்பவரின் காரை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். மேலும் சோதனையின் போது அகஸ்தியர் லிங்கம் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 75, 000 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஒரே நாளில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.