நாகை அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரு 62300 பறிமுதல்

நாகை அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரு 62300 பறிமுதல்

பறிமுதல்

நாகை அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 62300 பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரி கல்யாண குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது சரக்கு வாகனத்தில் வந்த தலைஞாயிறு அருகே பிரிஞ்சுமூலை அம்பேத்கர் நகரை சேர்ந்த மதிவாணன் இடம் ரூ.62 ஆயிரத்து 300 பணம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் கவிதாஸ் , தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரகலா ஆகியோர் இடம் ஒப்படைத்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story