திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூபாய் 57,980 பறிமுதல்
தேர்தல் கண்காணிப்பு குழு
திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 57 ஆயிரத்து 980 ரூபாயை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது. அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் காரில் ரொக்கப்பணம் 57 ஆயிரத்தி 980 ரூபாய் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது. தெரியவந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் தேர்தல் கணக்கு (பொ) திரு.தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து. கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.
Next Story