கொல்லாம்பழம் சீசன் துவங்கியது : கிலோ ரூ100க்கு விற்பனை.
கொல்லாம்பழம்
தூத்துக்குடி மாவட்ட தேரிக்காடுகளில் விளையும் கொல்லாம்பழ சீசன் துவங்கியது. கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான தேரிக்காடு பகுதியில் அதிக அளவில் கொல்லாம்பழம் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த பழமானது கொல்லாம்பலம் எனவும் முந்திரி பழம் எனவும் அழைக்கப்படுகிறது. கொல்லாம் பழ சீசனாது ஏப்ரல், மே ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் இருக்கும். தற்போது மரத்திலிருந்து கொல்லாம்பழம் விற்பனைக்காக பறிக்கப்படுகிறது. இந்த பழமானது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொல்லாம்பழம் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. கொல்லம்பழத்தில் மருத்துவ குணம் உள்ளதாலும், வெயிலுக்கு உகந்தது என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால மக்கள் வெளியை வருவது குறைந்துளளதால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story