ஜாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்


தமிழக முதல்வர் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பில் செய்யார், வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள் பேசியாதாவது : இந்திய முழுவதும் பிற மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கின்றனர்.

ஆனால் சமூக நீதிக்கு சொந்தக்காரர்கள் என்று பெருமைப்படுத்திக் கொள்ளும் திமுக அரசு ஏன் இன்னும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். உடனடியாக தமிழக முதல்வர் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பீகார் மாநிலத்தில் 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஜாதி வாரிய கணக்கெடுப்பு எடுத்தால் மட்டும்தான்.

இட ஒதுக்கீடு வழங்க முடியும் ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதிக்கு முக்கியமானவை என்று சமூக நீதி என்று பேசினால் மட்டும் போதாது சமூக நீதி நிலைநாட்ட வேண்டும் என்றால் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும். ஒவ்வொரு மாநிலமும் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர் இந்த மண் பெரியார், அண்ணா வாழ்ந்த மண் அவர்களை நாங்கள் பின்பற்றி வருவதாக சொல்லும் தமிழக அரசு ஏன் இன்னும் ஜாதிவாரி கணக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றன. 1993-94 ஆம் ஆண்டு 9வது அட்டவணையில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அது மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.

அதனை யாரும் செய்ய ஈடு சேய்ய முடியாது.. மேலும் நீட் தேர்வு ரத்து என்பதே பாமகவின் கொள்கை கிராமப்புற மக்கள் ஏழை எளிய மக்கள் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை நீட் தேர்வு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை திருவண்ணாமலை மாவட்டம் மிகப்பெரிய மாவட்டம் என்பதால் இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கை.

செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு 2700 ஏக்கர் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வரும் நிலையில் விவசாய நிலங்களையும், சுற்றுச்சூழலையும், அழித்து வளர்ச்சி தேவையில்லை இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளன. விவசாயம் நிலம் இல்லாமல் ஒவ்வொரு செண்ட் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்…

Tags

Next Story