மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் சாதிபாகுபாடு?
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை வரலாற்று சிறப்புமிக்க 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பணிசெய்யும் பேராசிரியருக்கு மத்தியில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாகவும் சாதி ரீதியாக வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் கல்லூரிக்குள் சாதிய கட்டமைப்புகளை மாணவர்கள் மூலம் உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பேராசிரியர்கள் ஒருவருக்கொருவர் சாதி ரீதியில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பொறியியல் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணன் என்பவருக்கும் அதே துறையில் பேராசிரியராக பணி செய்த சுப்புராமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பேராசிரியர் கிருஷ்ணன் சாதி ரீதியாக மாணவர்களை கையாளுவதாக குற்றச்சாட்டு எழுந்தது பேராசிரியர் கிருஷ்ணன் மற்ற பேராசிரியர்களின் வகுப்பறைக்கு சென்று பேராசிரியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ததாகவும் பி.ஹொச்.டி மாணவர்களிடம் மோதலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்த நிலையில் பேராசிரியர் கிருஷ்ணனுக்கு எதிராக பொறியியல் துறை மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.
இந்த செய்தி தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணையின் இறுதியாக பேராசிரியர் கிருஷ்ணனை நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கும் பேராசிரியர் சுப்புராமனை மயிலாடுதுறை அரசு கல்லூரிக்கும் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டது. பேராசிரியர் கிருஷ்ணன் தன்னை பணி மாற்றம் செய்தது தவறு என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். மேலும் கல்லூரி முதல்வர் என்னை சாதி ரீதியாக பேசியதாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு கொடுத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பேராசிரியர் சுப்புராமன் தன்னை மாறுதல் செய்யப்பட்ட மயிலாடுதுறை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்து பணி செய்து வருகின்றார். பேராசிரியர் கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் நான்கு அரசு கல்லூரிகளை சுட்டிக்காட்டி ராசிபுரம், நாமக்கல், முசிறி மற்றும் நிலக்கோட்டை இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இதை ஏற்க மறுத்த கிருஷ்ணன் தனக்கு மீண்டும் சிவகங்கை மன்னர் கல்லூரியில் பணி செய்ய பணி ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இந்நிலையில் நீதிமன்றம் பேராசிரியர் கிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை கிருஷ்ணன் ஏற்காததால் இந்த வழக்கை இத்துடன் முடித்து வைத்து கல்லூரி கல்வி இயக்குனர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கை முடித்து வைத்தது.
பேராசிரியர் கிருஷ்ணன், சுப்பிரமணனுக்கு பதிலாக புதுக்கோட்டை அரசு கல்லூரியில் இருந்து பணி மாறுதல் செய்யப்பட்டு சிவகங்கை கல்லூரியில் பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் சுதாகர், கர்ணன் இந்த இருவரும் கடந்த எட்டாம் தேதி மீண்டும் புதுக்கோட்டை அரசு கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்கள்.
இதனைத் கல்லூரி கல்வி இயக்குனரினிடம் சிவகங்கை கல்லூரியில் பணியிடம் காலியாக இருப்பதாக கூறி தன்னை அந்தக் கல்லூரியில் பணி செய்ய ஆணை வழங்க வேண்டும் என்று கேட்டு மீண்டும் பணிமாறுதல் ஆணை பெற்று சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் , பேராசிரியர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .