சாதி வாரியாக கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ்

சாதி வாரியாக கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ்

திருமண விழாவில் பேசும் அன்புமணி

சாதி வாரியாக கணக்கெடுப்பின் மூலம் தான் சமூகநிதியை நிலைநாட்ட முடியும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் பில்லா மாதேஷ் அவர்களது இல்ல திருமண விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

இந்த திருமண விழாவில் கட்சி தொண்டர்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது காட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, பாமக தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து புரிதல் இல்லாததால், நாங்கள் சாதிக்காக பேசி வருவதாக தவறாக நினைக்கின்றனர். உண்மையாக சாதி வாரிய கணக்கெடுப்பின் மூலம் தான் சமூகநிதியை நிலைநாட்ட முடியும். அனைத்து சமுதாய மக்களுக்கும் வளர்ச்சி பெற்று, சமநிலை அடைய முடியும்.

கடந்த 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த தரவுகளை வைத்து கொண்டு தான் தற்போது வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சுமார் 90 முதல் 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எந்த சமுதாய மக்கள் வளர்ச்சி, முன்னேற்றம், பின்தங்கியும், மிகவும் மோசமாக உள்ளனர் என்பதை அறிய முடியும். அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியும். பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு 94 லட்சம் குடும்பத்தினர் ரூ.6 ஆயிரம் வருவாய் கீழ் பெறுகின்றனர். இதனை கணக்கெடுப்பு மூலம் கண்டறிந்த பீகார் முதல்வர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த குடும்பங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதே போல், தமிழகத்தில் 436 சாதிகள் உள்ளன. இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்.

ஒவ்வொரு சமூகத்தில் வாழும் மக்களின் தற்போதைய நிலை அறியப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கான சமூகநிதி, இடஒதுக்கீடு வழங்கி முன்னேற்றம் அடைய செய்திட வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதை தான் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் இதனை சரியான புரிதல் கொண்டு சாதிவெறி கண்ணனுக்கு எடுத்திட வேண்டுமென பேசினார்.

Tags

Next Story