இடையூறு செய்த குரங்குகள் பிடிப்பு

இடையூறு செய்த குரங்குகள் பிடிப்பு

திருப்போரூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு செய்த குரங்குகள் பிடிபட்டன.


திருப்போரூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு செய்த குரங்குகள் பிடிபட்டன.
திருப்போரூர் பேரூராட்சியில் சந்து தெரு, சான்றோர் வீதி, மாடவீதி, கந்தசுவாமி கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், வீடுகளில் புகுந்து மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்களை எடுத்து செல்கின்றன. அதேபோல், கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜைக்கு கொண்டு வரும் தேங்காய், பழங்கள், பூக்களை அபகரித்து கொள்கிறது. விரட்ட முயலும் நபர்களை குரங்குகள் கடிக்க முயல்கின்றன. கடந்த மாதம் 15ம் தேதி சந்து தெருவில் 13 வயது சிறுமியின் காலில், ஒரு குரங்கு கடித்து காயத்தை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன் ஒரு பெண் ஒருவரின் முதுகு பக்கம் கடித்து ரத்தக் காயத்துடன் மருத்துவமனைக்கு சென்றார். சில மாதங்களுக்கு முன் கோவில் வளாகத்தில் சிறுவன் காலில் கடித்து காயத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, கோவில் நிர்வாகம் நம் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி குரங்குகளை பிடிக்க கோரிக்கை வைத்தது. முதற்கட்டமாக, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நேற்று, கந்தசுவாமி கோவில் வளாகத்தில் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story