மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்லில் சாலையில் சுற்றித்திரிந்த 3 மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதையடுத்து தனிப்படை அதிகாரிகள் நேற்று அங்கு விரைந்தனர். பின்னர் சாலையில் சுற்றித்திரிந்த 3 பசுமாடுகளை பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்றினர். இதற்கு மாட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் தனிப்படை அதிகாரிகள் மாடுகளை வாகனத்தில் ஏற்றி, மாநகராட்சி வாகன காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வசூலித்தனர்.

Tags

Next Story