ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

கால்நடை குடிநீர் தொட்டிக்காக செலவிடப்பட்ட மக்களின் வரி பணம் பல லட்சம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை அடைகின்றனர்.


கால்நடை குடிநீர் தொட்டிக்காக செலவிடப்பட்ட மக்களின் வரி பணம் பல லட்சம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை அடைகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சி, சிவம்கூடல் பகுதியில் கால்நடைகள் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இங்கு, பெயரளவிற்கு தொட்டி அமைக்கப்பட்டதே தவிர, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. தற்போது காட்சி பெருளாக மாறி உள்ளது. இதனால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் குடிநீர் இன்றி அலைகின்றன. அதே போல, மஹாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மண் புழு தயாரிக்கும் கூடம் செயல்படாமல் குப்பை மேடாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பல ஊராட்சிகளில் இது போன்று, பெயரளவிற்கு திட்டங்களை கொண்டுவந்து, முறையாக செயல்படுத்தாததால், இதற்காக செலவிடப்பட்ட மக்களின் வரி பணம் பல லட்சம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அரசு திட்டங்களின் பயன் முறையாக மக்களுக்கு சென்றடைய, மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story