மேட்டூரில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

மேட்டூரில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

சாலையில் திரியும் மாடுகள்

மேட்டூரில் கால்நடைகளால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் ஏராளமான பொதுமக்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகளை வளர்க்கும் பொதுமக்கள், அவற்றை தங்களது வீடுகளில் கட்டி போடுவது இல்லை.

காலையில் பால் கறந்ததும் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அந்த மாடுகள் இரை தேடி சாலைகளில் சுற்றித்திரிகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென்று வாகனங்களுக்கு முன்பாக வந்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும், வாகன ஓட்டிகள் காயம் அடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story