நல்லம்பள்ளி வாரச்சந்தையில் 85 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
கால்நடைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வார சந்தை நடைபெறும் நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
இன்று சிறிய அளவிலான ஆடுகள் 3 ஆயிரம் ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் சுமார் 17,000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 35 லட்சத்திற்கும், மேலும் நாட்டு மாடுகள் 8,000 ரூபாய் துவங்கி 60,000 ரூபாய் வரையிலும், ஜெர்சி கலப்பின பசுக்கள் 6,000 ரூபாய்க்கு துவங்கி 70,000 வரையிலும், நாட்டு எருமை மாடுகள் 5,000 ரூபாய்க்கு துவங்கி 40,000 ரூபாய் வரையிலும்,
சுமார் 50 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையும், மொத்தமாக கால்நடைகள் 85 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.