மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம்
விழுப்புரம் பவ்டா அரங்கில் மாநில மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் வக்கீல் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். நிறுவனரும், மாநில ஆலோசகருமான ஜாஸ்லின் தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அரசு மணல் குவாரிகளில் குறிப்பிட்ட அளவு மணல், குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற மாட்டுவண்டி தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி, நாஞ்சில் ராஜேந்திரன் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி தொழிலாளர் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முடிவில் சாலாமேடு சங்கத்தை சேர்ந்த அசோக் நன்றி கூறினார்.