திருப்புவனம் சந்தையில் காலிபிளவர் விலை இருமடங்காக உயர்வு

திருப்புவனம் சந்தையில் காலிபிளவர் விலை இருமடங்காக உயர்வு

காலி பிளவர் 

திருப்புவனம் சந்தைக்கு காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம் ஒரு கிலோ காளிஃப்ளவர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் 40 ரூபாய் என விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில் பெங்களூரு உள்ளிட்ட பகுதியிலிருந்து காலிபிளவர் மார்க்கெட்டிற்கு வருகிறது. 80 கிலோ எடை கொண்ட ஒரு மூடை 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதனால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்த காலிபிளவர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஜனவரிக்கு பிறகு தான் விலை குறைய வாய்ப்புள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story