காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவரை மாற்ற வேண்டும் - விவசாயிகள் சங்கம்

காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவரை மாற்ற வேண்டும் - விவசாயிகள் சங்கம்

  காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவரை மாற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவரை மாற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படும் காவிரி ஒழுங்காற்று குழு தலைவரை மாற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது .

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மே தினக்கூட்டம், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி ஒன்றியத் தலைவர் சசிக்குமார், ஒன்றியச் செயலாளர் மகேஸ் காளிமுத்து, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜான் போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொண்டரணி செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தலைவர் முகமது இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளத்திற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்கக்கூடாது, காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதுடன், காவிரி ஒழுங்காற்று குழு தலைவரை உடனடியாக மாற்றம் செய்ய ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது, தமிழகத்தில் அதிக தேங்காய் உற்பத்தியாகும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு , பகுதி தேங்காய்க்கு அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காயை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யும் நவீன தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

உரித்த தேங்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்குவதை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரிய திட்டங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story