நீர்வரத்து குறைந்ததால் வறண்டு போன காவிரி ஆறு
வறண்டு போன காவிரி ஆறு
நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு ஓடுகிறது . மேட்டூர் அணையிலிருந்து நீர் அதிகளவு திறக்கப்படும் நாட்களில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்படுவது வழக்கம்.
மேலும் ஓடப்பள்ளி கதவணைப் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் எடுக்கப்படுவதால், எப்போதும் காவிரி ஆறு அதிகளவு நீர் சூழ்ந்து காணப்படும்.மேலும் பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலமாக குடிநீர் செல்கிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்து பாறைகள் தென்படுகிறது.
மேலும் காவிரி ஆற்றை சுற்றிலும் அதிக அளவு இருந்த ஆகாயத்தாமரை செடிகள் தற்போது காவிரி கரையோர பகுதிகளில் படர்ந்து உள்ளது.போர்க்கால அடிப்படையில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.