காவிரி நீர் விவகாரம்: ஜி.கே வாசன் அறிவுறுத்தல்

X
ஜி. கே வாசன்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே வாசன் அறிவுறுத்தியுள்ளர்.
சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது. நமக்கு உரிய தண்ணீரை விரைவாக கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
Next Story
