மின்சாரம் பாய்ந்து சிபிசிஐடி தலைமைக் காவலா் உயிரிழப்பு
காா்த்திகேயன்
திருச்சி அருகே மின் கசிவு காரணமாக தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த சிபிசிஐடி தலைமைக் காவலா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், சிறுகமணி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் எம். காா்த்திகேயன் (46). திருச்சியில் சிபிசிஐடி ஓசியு பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். புதிதாக வீடு கட்டி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மின் மோட்டாரை இயக்கிகட்டட வேலைக்காக தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தார் .அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் கசிந்து, காா்த்திகேயன் மீது பாய்ந்துள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், காா்த்திகேயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த காா்த்திகேயனுக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனா்.
Next Story