வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி அதிகாரி மாற்றம்!

சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு தஞ்சாவூர் டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டிகள் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு தஞ்சாவூர் டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார். இதில் டிஎஸ்பி பால்பாண்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் மேலும் விசாரணையில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Tags

Read MoreRead Less
Next Story