நமக்கு நாமே திட்டத்தில் சிசிடிவி கேமரா

நமக்கு நாமே திட்டத்தில் சிசிடிவி கேமரா

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க நமக்கு நாமே திட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது.


மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க நமக்கு நாமே திட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தின் 2 வது பெரிய வர்த்தக நகர மான மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் அங்கு திருட்டு களும் அதிகமாக நடக்கி றது. இதை கண்காணிக் கும் விதத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 7 லட்சம் செலவில் 16 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் பஸ் நிலையம் முழுவதும் கட் டுப்பாட்டில் கொண்டு வரும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது.இதற்கான பணியை குழித்துறை நகராட்சி சேர் மன் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். ஆணையாளர் ராம திலகம், மார்த்தாண்டம் இன்ஸ் பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரத்தினமணி, விஜு, ஓவர்சியர் விஜயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story