CCTV கேமரா பழுது ஒரு மணி நேரத்தில் சரி்செய்யப்பட்டது: மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை்காக பவானி அருகே உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் நேற்றிரவு ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு CCTV கேமரா பழுது ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த பின் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தை கடந்த 10 நாட்களாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ,
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஆய்வு நடத்தி வருவதாகவும் , இந்த மையம் 3 அடுக்கு பாதுகாப்பில் 221 CCTV கேமரா வைக்கப்பட்டு மையம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் உள்ளது என்றார்.
நேற்றிரவு மேற்கு சட்டமன்ற தொகுதிக்புட்பட்ட ஸ்டிராங் ரூம் முன்பு ஒரு CCTV கேமரா பழுது ஏற்பட்டதாகவும் , அந்த பழுது ஒரு மணி நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டு விட்டது என்றார் எலக்டரானிக் பழுது ஏற்படுவது சகஜம் என்ற மாவட்ட ஆட்சியர் , இங்குள்ள CCTV கேமரா காட்சிகள் 3 மாதங்களுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் என்றும் அதிக தரம் வாய்ந்த CCTV கேமரா என்பதால் அதிக வெப்பத்தால் பழுது ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவும் தெரிவித்தார்