ராசிபுரத்தில் கார் கால்வாயில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வைரல்
கால்வாயில் சிக்கிய கார்
இராசிபுரம் பகுதியில் பைக் கார் மோதி சாக்கடை கால்வாயில் சிக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் கடந்த 24ஆம் தேதி காலை 8 மணி அளவில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் இடது புறம் உள்ள சாக்கடை கால்வாயில் கார் விழுந்த பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கும் காரில் பயணம் செய்தவர்களுக்கும் சிறு காயமே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Next Story