ஆத்தூரில் சொகுசு காரில் வந்து கொள்ளை அடிக்கும் சிசிடிவி வைரல்
சிசிடிவி காட்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் ஜே.கே. நகர் பகுதியில் வசிப்பவர் முருகையா மகன் கிருஷ்ணமோகன் (43) இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பிரபல ஜோதிடராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவியின் சித்தப்பா வீட்டிற்கு திருவிழாவிற்காக கடந்த இரண்டு நாட்களாக வெளியூர் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 28 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனை அடுத்து கிருஷ்ணமோகன் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு பின்னர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து பின்னர் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள சிசிடிவி கட்சியில் சொகுசு காரில் இரண்டு மர்மா சாமிகள் ஒருவர் பின் ஒருவராக வீட்டின் சுவர் ஏறி உள்ளே சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் வெளியே சொகுசு காரில் ஏறி செல்லும் காட்சி சிசிடிவி யில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. போலீசார் சிசிடிவி கட்சியின் அடிப்படையில் காரில் கொள்ளையடித்துச் செல்லும் மர்ம அசாமிகள் குறித்து வலை வீசி தேடி வருகின்றனர்.